Tiruppavai with Tamil lyrics -திருப்பாவைTiruppavai with Tamil lyrics -திருப்பாவை - pdfenter

Tiruppavai with Tamil lyrics -திருப்பாவை

Tiruppavai with Tamil lyrics -திருப்பாவை

ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும். அந்தவகையில், மார்கழி மாதத்தின் முதல் நாள் பாடவேண்டிய திருப்பாவை பாடல் 1.

திருப்பாவை பாடல் 1:

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

திருப்பாவையின் முதல் பாசுரமான இதில், பாவை நோன்பு யாருக்காக, யாரை முன்னிட்டு யார் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கூறியுள்ளார் ஆண்டாள். இனிதே துவங்கியிருக்கின்ற மார்கழி மாதத்தில் முழு நிலவு ஒளி வீசும் நன்னாள் இது. அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே, ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமியர்களே!.. இன்று நாம் நீராட கிளம்புவோம்.

கூர்மையான வேலுடன் நம்மை பாதுகாத்து வரும் நந்தகோபர், அழகிய விழியுடைய யசோதா தேவியின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கின்றான். அவரைப் பாடி புகழ்ந்தால், நம்மை இந்த உலகமே வாழ்த்தும்.

மார்கழி மாதத்தில் திருப்பாவை பாட வேண்டிய காலம் :

மார்கழி மாதம் அதிகாலை 4.30 மணிக்குள் எழுந்து நீராடி, கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியோ திருப்பாவை பாடலை தினமும் மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். திருப்பாவை பாடல்களை முழுமையாக அல்லாமல், மார்கழி மாதம் முழுவதற்கும் வருமாறு ஒரு நாளைக்கு ஒரு பாடலாக, அந்த ஒரு பாடலை மூன்று முறை பாடவேண்டும்.

இத்துடன் தினமும் வாரணமாயிரம் பகுதியில் இருந்து, ‘வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத..’ உள்ளிட்ட பிடித்தமான பாடல்களையும் துதிப்பாடல்களாக சேர்த்து பாட வேண்டும்.

watch this in the following link

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *